தோஹா,அக்.31- காசாவில்உள்ள பாலஸ்தீனர்களின் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் செய்திகளை அல் ஜசீரா செய்தி நிறுவனம் அதிகம் வெளியிட வேண்டாம் என கத்தார் நாட்டிடம் அமெரிக்கா கெஞ்சியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் போர்க் குற்றங்களை, மனித உரிமை மீறல்களை அல் ஜசீரா செய்தி நிறுவனம் உலக மக்களிடையே அம்பலப் படுத்தி வருகிறது.இந்த செய்தி நிறுவனத்தின் செய்திகளால் தினந்தோறும் உலகம் முழுவதும் பல அதிர்வலைகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கத்தார் நாட்டிற்கு சென்ற அமெ ரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் அந்நாட்டு தலைநகர் தோஹாவில் கத்தார் பிரதமர் ஷேக் முகமதுவை சந்தித்து அல் ஜசீரா, இஸ்ரேல்-பாலஸ்தீன போர் குறித்து வெளியிடும் செய்திகளை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
காசாவில் செயல்படும் சில செய்தி நிறுவனங்களில் அல் ஜசீராவும் ஒன்றாகும்.இது கத்தார் அரச குடும்பத் தால் நிதியளிக்கப்படும் நெட்வொர்க் ஆகும். இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுவீச்சில் ஏற்பட்ட அழிவுகளை யும், அவர்கள் நடத்திவரும் இன அழிப்பு குறித்த செய்திகளையும் இந்த செய்தி நிறுவனம் தொடர்ந்து வெளியுலகத்திற்கு கொண்டு வருகிறது. இந்த செய்திகள் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்புவதோடு, அமெரிக்க அரசிய லிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக பாலஸ்தீனர்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு அமெரிக்கா முழு உடந்தை யாக இருப்பதால் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத் திற்குள்ளேயே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது என்றும் கூறப்படுகிறது.